பேரறிவாளன் விடுதலை – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

 

பேரறிவாளன் விடுதலை – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த கடிதத்தின் நகலை பெற்றுத்தரக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பேரறிவாளன் விடுதலை – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எம்.டி.எம்.ஏ விசாரணை முடியும் வரையில் முடிவெடுக்க முடியாது என ஆளுநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தண்டனையை நிறுத்த கோரிய வழக்கில் விடுதலை செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் ஜனாதிபதிக்குதான் அதிகாரம் உள்ளது என்றும் ஆளுநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “சென்னை உயர்நீதிமன்றத்தில் மாறுப்பட்ட தகவல்களை ஆளுநர் வழங்கியிருக்கும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அவர் அனுப்பிய கடித நகலை தனக்கு பெற்று தர வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.