கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

 

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

சென்னை கேளம்பாக்கம் அருகே சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியை சிவசங்கர் பாபா எனும் சாமியார் நடத்தி வருகிறார். சிவசங்கர்பாபா, தனது பள்ளியில் பயிலும் மாணவிகளை பக்தையென கூறி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிவசங்கர் பாபா மீது நூற்றுக்கணக்கான புகார்கள் ஆன்லைன் மூலமாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறும் ஆணையத்தின் நிர்வாகிகள், சிவசங்கர்பாபா ஆணையத்தின் முன்பு ஆஜராகவும் சம்மன் அனுப்பினர். ஆனால், சிவசங்கர் பாபா நேற்று ஆஜராகவில்லை, சுஷில் ஹரி பள்ளி தாளாளர் வெங்கட்ராமன், வழக்கறிஞர் நாகராஜன் உட்பட நிர்வாகிகள் மட்டும் ஆஜராகினர். சில மாதங்கங்களுக்கு முன்பு ஆன்மீக சுற்றுலாவிற்கு உத்தரகாண்ட் சென்ற சிவசங்கர் பாபாவிற்கு அங்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சிவசங்கர் பாபாவிற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகிகளும், பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் தரப்பில் இருவர் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.