தோஷங்கள் நீக்கி சௌபாக்கியம் அருளும் நித்யா தேவி மந்திரம்!

 

தோஷங்கள் நீக்கி சௌபாக்கியம் அருளும் நித்யா தேவி மந்திரம்!

அன்னை பராசக்தியின் கால வடிவமே நித்யா தேவிகள் ஆவர். பிரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களும் வரும் சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிதேவதைகளாக 15 தேவியர் வணங்கப்படுகின்றனர்.

தோஷங்கள் நீக்கி சௌபாக்கியம் அருளும் நித்யா தேவி மந்திரம்!

இதில் சுக்ல பட்ச தசமி திதிக்கும் கிருஷ்ணபட்ச சஷ்டி திதிக்கும் அதிதேவதையாக இருப்பவர் நித்யா. சுக்ல பட்ச தசமி மற்றும் கிருஷ்ண பட்ச சஷ்டி நாட்களில் இவரை வணங்கி, இவருக்கான மந்திரத்தைக் கூறி வந்தால் நம்மைப் பிடித்த தோஷங்கள் நீங்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஜ்வாலா மாலினி நித்யா திதி நித்யாதேவிகளில், பத்தாவது இடத்தில் வாசம் செய்கிறாள்.  தாமரையின் மேல், நின்ற கோலத்தைக் கொண்டிருக்கிறாள். அன்னையின் புன்முறுவல் பூத்த ஆறு திருமுகங்களும், 12 திருக்கரங்களும்  வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றன.

மந்திரம்

ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே

நித்யா நித்யாயை தீமஹி

தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.