சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

 

சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

சிவசங்கர் பாபாவுக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா நடத்திவந்தார். இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கடந்த மாதம் டெல்லியில் வைத்து கைது செய்தனர். சிவசங்கர் பாபா மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் அவர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

சிவசங்கர் பாபா மீது மூன்று வழக்குகள் பதியப் பட்ட நிலையில் அதில் ஒன்று போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அவரை மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவசங்கர் பாபாவிடம் நடத்திய விசாரணையில் அவர் யாஹூ ஈமெயில் மூலம் மாணவிகளுடன் ஆபாசமாக செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரது இமெயில் முடக்கப்பட்டது.

சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

இந்த சூழலில் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் 18 பேர் புகார் அளித்த நிலையில் அவர் மீது மேலும் ஒரு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு எடுத்தனர். அதன் அடிப்படையில் அவர் மீது மேலும் ஒரு போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் 2வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆஜரான சிவசங்கர் பாபாவை 27ஆம் தேதி வரை சிறையில் அடைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.