சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம்

 

சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம்

சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த ஜூன் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 போக்சோ வழக்குகள் வழக்குகள் இவர் மீது பதியப்பட்டுள்ளது. அதில் ஒரு போக்சோ வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு சிறையிலுள்ள சிவசங்கர் பாபா உடல்நலக்குறைவு காரணமாக இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவை காரணம் காட்டி ஜாமீன்கோரிய நிலையில், அவரது ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்தது.

சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி இடமாற்றம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் மீதான 2-வது போக்சோ வழக்கின் குற்றப்பத்திரிகை இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் விஜிலென்ஸ் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக குணவர்மனை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.