’’சீமான் நேரடியாக பதில் சொல்ல வேண்டிய எளிய கேள்விகள்….’’

 

’’சீமான் நேரடியாக பதில் சொல்ல வேண்டிய எளிய கேள்விகள்….’’

கே.டி.ராகவன் வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. தொடர்ந்து கொந்தளித்து பேசி வந்தபோது ராகவனை கைது செய்ய வேண்டும் என்று சொல்லி வந்தபோது அதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, உலகத்தில் யாரும் செய்யாததையா செய்துவிட்டார். வீடியோ எடுத்தவரைத்தான் கைது செய்யவேண்டுமென்றார்.

’’சீமான் நேரடியாக பதில் சொல்ல வேண்டிய எளிய கேள்விகள்….’’

இதற்காக சீமானை கண்டித்து அறிக்கைகளை விட்டார் ஜோதிமணி. அதற்காக, ரொம்ப ரோசமா இருந்தா வெசம் குடிச்சு செத்துப்போ என்றார் சீமான். இதற்காக, காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜோதிமணி பாலியல் ஆதரவு குறித்து சீமானிடம் கேள்விகேட்டால், விசம் குடித்து செத்துப்போ என கிண்டலடிப்பது, பொதுவெளியில் பெண்கள் பேசுவதை விரும்பாத ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. அதுவே சனாதனம். நாம் தமிழர் கட்சியின் ஒரு பெண் கூடவா கண்டிக்க துணியவில்லை? என்று கேட்டார் விடுதலை சிறூத்தைகள் கட்சி பிரமுகர் வன்னி அரசு.

’’சீமான் நேரடியாக பதில் சொல்ல வேண்டிய எளிய கேள்விகள்….’’

பாலியல் குற்றவாளிகளுக்கு முட்டு கொடுப்பதை எதிர்த்து கேள்விகேட்கும் பெண் அரசியல் தலைவர்களை “விஷம் குடித்து செத்துப் போ” என சொல்லி அசிங்கமாக சிரிப்பது அருவெறுப்பின் உச்சம். இதுதான் இவர்கள் பேசும் “அன்பான சர்வாதிகாரம்” என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்றார் கவிஞர் சல்மா.

தமிழ்நாடு மகிளா காங்கிரசாரும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதன்பின்னர் ஜோதிமணி, பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள, அப்பட்டமாக கே.டி ராகவன் போன்ற பாலியல் குற்றவாளிகளை ஆதரிக்கின்ற சீமானெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்கிறபோது, பெண்களின் பாதுகாப்பிற்கு போராடுகிற நான் எதற்கு விஷம் குடிக்க வேண்டும்? பாஜகவைச் சொன்னால் சீமானுக்கு ஏன் வலிக்கிறது? என்று கேட்டார்.

’’சீமான் நேரடியாக பதில் சொல்ல வேண்டிய எளிய கேள்விகள்….’’

ஜோதிமணி இந்த விவகாரத்தை விடாமல், பத்திரிகைகள், ஊடகங்களில் தொடர்ந்து சீமானுக்கு எதிராக பேட்டிகள் அளித்து வருகிறார். தனது டுவிட்டர் பக்கத்திலும் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகிறார். அவர் தற்போது, பொதுவெளியில் ” யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார்” என்று பாஜக ராகவனின் பாலியல் குற்றத்தை சிறிதும் வெட்கமின்றி ஆதரிக்கும் சீமான் எனது கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லமுடியாமல் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்காக நான் பேசுவதாக சொல்கிறார். பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களை, பாலியல் குற்றவாளிகளை ஆதரிப்பவர்களை தட்டிக்கேட்க பதவி எதுவும் தேவையில்லை. மேலும். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி என்பது சீமான் போன்ற மலிவான, அரசியல்வாதிகளை விமர்சிப்பதன் மூலம் கிடைக்ககூடியதல்ல. பெருந்தலைவர் காமராசர் வகித்த மாபெரும் பொறுப்பு என்கிறார்.

சீமான் நேரடியாக பதில் சொல்ல வேண்டிய எளிய கேள்விகள்….பாலியல் குற்றவாளியான கே. டி. ராகவனை ஏன் ஆதரிக்கிறார்?பாலியல் குற்றவாளிகளின் புகலிடமான பாஜகவை ஆதரிக்க வேண்டிய தேவைஎன்ன? பாஜகவின் Bடீம் இல்லையெனில் ஏன் ஆதரிக்கிறார்? தன் மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு சீமானின் பதில் என்ன? என்று கேட்டிருக்கிறார்.