சுரங்கம் அமைத்து ரகசியமாக பாலியல் தொழில் – சுரங்க அறைக்குள் இருந்த பெண்கள் மீட்பு

 

சுரங்கம் அமைத்து ரகசியமாக பாலியல் தொழில் – சுரங்க அறைக்குள் இருந்த பெண்கள் மீட்பு

சொகுசு விடுதிகளில் நடைபெறும் பாலியல் தொழிலுக்கு போலீசாரின் கெடுபிடி இருப்பதால் ஓடும் பேருந்தை சொகுசு விடுதி ஆக்கி பாலியல் தொழில் நடந்து வருவது அம்பலமானது. படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்துகளில் நீண்ட தூர பயணம் செய்வது போல் சென்று உல்லாசம் அனுபவித்து வருகிறார்கள் என்பதும் தெரியவந்து அதற்கும் போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வந்திருக்கிறார்கள்.

சுரங்கம் அமைத்து ரகசியமாக பாலியல் தொழில் – சுரங்க அறைக்குள் இருந்த பெண்கள் மீட்பு

பாலியல் தொழிலை தடை செய்ய போலீசார் எப்படியெல்லாமோ நடவடிக்கை எடுத்து வந்தாலும் பாலியல் தொழிலிலும் எப்படியெல்லாமோ புதுபுது டெக்னிக்கில் நடந்தபடி தான் இருக்கின்றன.

போலீஸ் கெடுபிடியில் இருந்துன் தப்பித்து எப்படி பாலியல் தொழில் செய்வது என்பதற்கு உச்சகட்டமாக ரகசியச் சுரங்க அறை அமைத்து அதற்குள் பாலியல் தொழில் நடத்தி வந்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அம்மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தான் இப்படி ரகசிய சுரங்கம் அமைத்து பாலியல் தொழில் நடந்து வந்திருக்கிறது.

தும்கூர் -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதிகளில் அதிக அளவில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. தும்கூர் தேசிய நெடுஞ்சாலையில் அண்மையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஆணுறைகள் கொட்டப்பட்டு இருப்பதையும் தகவல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின.

சுரங்கம் அமைத்து ரகசியமாக பாலியல் தொழில் – சுரங்க அறைக்குள் இருந்த பெண்கள் மீட்பு

இதையடுத்து போலீசார் தும்கூர் பகுதியில் உள்ள சொகுசு விடுதிகளில் சோதனை நடத்தினர். நந்தி லாட்ஜ் என்னும் தனியார் விடுதியில் போலீசார் ஆய்வு நடத்தியபோது அறைகளில் பெண்களும் இல்லை பாலியல் தொழிலும் நடைபெறுவது போல் எதுவும் இல்லை. ஆனால் போலீசாருக்கும் சந்தேகம் வந்தது . இதனால் அறைகளை அங்குமிங்கும் அலசி பார்த்தனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் அறைகள் அமைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டனர்.

அந்த லாட்ஜில் பாலியல் தொழில் நடக்கவில்லை என்பது போல் இருந்தாலும் ஆனால் நடக்கிறது என்பது மட்டும் போலீசாருக்கு தெரிந்தது . ஆனால் ஒவ்வொரு அறையிலும் யாருமில்லை என்பதும் அவர்களை திக்குமுக்காட வைத்தது .

ஒரு அறையில் அங்கும் இங்கும் நோட்டமிட்ட போது மேஜை ஒன்று இருந்தது. அந்த மேஜையை அகற்றி விட்டு தட்டி பார்த்து உள்ளனர். அப்போது ஒரு நபர் மட்டும் நுழைந்து செல்லும் அளவிற்கு கதவு ஒன்று திறந்து இருக்கிறது. இதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். போலீசார் திறக்கப்பட்ட அந்த கதவு வழியாக உள்ளே நுழைந்தால் , அங்கே ரகசியச் சுரங்க அறை அமைத்து பாலியல் தொழில் நடந்து வருவது கண்டு திடுக்கிட்டனர். அந்தரங்க அறைக்குள் இருந்த பெண்களையும் இளைஞர்களையும் போலீசார் மீட்டனர்.