கடந்த 10 ஆண்டுகளில் மேல்நிலை கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கடந்த 10 ஆண்டுகளில் மேல்நிலை கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மதுரை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிகல்விதுறை சார்பாக பள்ளி மாணவ மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்.

கடந்த 10 ஆண்டுகளில் மேல்நிலை கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, “விலையில்லா மிதிவண்டி கொடுக்கும் பணிக்காக ரூ7,54,30,243 மதிப்பீட்டில் 19,443 சைக்கிள்கள் 183 பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. ஜெயலலிதாவின் வழியில் மாணவர் சமுதாயத்தின் விடிவெள்ளியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் மேல்நிலை கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. படிக்கும் மாணவர்களுக்கு தேவையான அத்துணை உதவிகளையும் எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகிறார்

கல்வியில் விருதுநகர் மாவட்டம் மீண்டும் முதலிடத்தில் வருவதற்கு கல்வித்துறை அதிகாரிகளும் மாணவர்களும் உழைக்க வேண்டும. அம்மா கொண்டுவந்த எந்த திட்டத்தையும் நிறுத்தக்கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்” என பேசினார்