“வா தலைவா..ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான்” – போஸ்டர்களால் பரபரப்பு!

“வா தலைவா..ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான்” – போஸ்டர்களால் பரபரப்பு!

நடிகர் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வரக்கோரி திண்டுக்கல்லில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்பது பேசு பொருளாகியுள்ள நிலையில், அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. அண்மையில் அவர் கட்சி தொடங்கவுள்ளதாகவும் நவம்பர் மாதம் அதனை பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்பட்டது.

“வா தலைவா..ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான்” – போஸ்டர்களால் பரபரப்பு!

ஆனால், உடல்நிலை பிரச்னைகள் இருப்பதாகவும் உரிய நேரத்தில் தனது அரசியல் நிலைபாடு குறித்து அறிவிப்பேன் என்றும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இருந்தாலும், அவரது உடல்நிலை தான் முக்கியம் என ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.

“வா தலைவா..ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான்” – போஸ்டர்களால் பரபரப்பு!

இத்தகைய சூழலில் தான், ரஜினி ரசிகர்கள் ஆங்காங்கே போஸ்டர்கள் ஓட்டி பரபரப்பை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல்லிலும் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், வா தலைவா.. ஓட்டுன்னு போட்ட உங்களுக்கு தான். எங்களின் இறுதி நம்பிக்கை நீங்கள் தான் என குறிப்பிட்டுள்ளனர்.