கவிஞர் சினேகன் – நடிகை கன்னிகா ரவி காதல் திருமணம்

 

கவிஞர் சினேகன் – நடிகை கன்னிகா ரவி காதல் திருமணம்

கவிஞர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி செயலாளருமான சினேகாவுக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் வரும் 29 ஆம் தேதி அன்று காலை 10.45 மணியளவில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சீர்திருத்தத் திருமணம் நடைபெற இருக்கிறது. இத்திருமணம் ஒரு காதல் திருமணம். எட்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் இப்போதுதான் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முன்வந்துள்ளனர்.

கவிஞர் சினேகன் – நடிகை கன்னிகா ரவி காதல் திருமணம்

கே. பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி தொடரின் மூலம் அறிமுகமானவர் கன்னிகா ரவி. அடுத்து இவர் சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை என படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். பின்னர் மீண்டும் இவர் தொலைக்காட்சி தொடர்களுக்கு திரும்பி கல்யாணவீடு என்ற சீரியலில் நாயகியாக நடித்து வந்தார். அந்த சீரியலில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கல்யாண வீடு தொடரில் முதலில் சூர்யா கதாபாத்திரத்தில் ஸ்பூர்தி கவுடா நடித்து வந்தார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததால் அதற்கு அவருக்கு பதிலாக கன்னிகா ரவி நடித்து வந்தார். கன்னிகா ரவி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தார்.

கவிஞர் சினேகன் – நடிகை கன்னிகா ரவி காதல் திருமணம்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் சினேகன் 1978ல் புதுக்கரியாப்பட்டி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சிவசெல்வம். சென்னையில் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தம் புது பூவே திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் பாண்டவர்பூமி, மௌனம் பேசியதே , பகவதி, சாமி, கோவில், ஆட்டோகிராப், மன்மதன், ராம் , பருத்திவீரன், யோகி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

கவிஞர் சினேகன் – நடிகை கன்னிகா ரவி காதல் திருமணம்

பாண்டவர் பூமி என்ற படத்தில் இவர் எழுதிய பாடல் மிகப் பிரபலமானது. ’அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்’ என்ற பாடல் பிரபலம். அடுத்ததாக ஆட்டோகிராப் படத்தில் இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இதற்கு அடுத்ததாக ராம் படத்தில் ’ஆராரிராரோ’ பாடல் மிகப்பிரபலம். பருத்திவீரன் படத்தில் அனைத்து பாடல்களையும் இவர் எழுதியிருந்தார். அத்தனையும் ஹிட். ஆடுகளம் படத்தில் அவர் எழுதிய பாடல் பிரபலம். ‘ முதல் அத்தியாயம்’, ’இன்னும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள்’, ’இப்படியும் இருக்கலாம்’, ’புத்தகம்’, ’அவரவர் வாழ்க்கையில்’ உள்ளிட்ட புத்தகங்களையும் எழுதியிருக்கும் கவிஞர் சினேகன், யோகி, உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணிச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.