#BREAKING: நடிகர் விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
Apr 17, 2021, 12:08 IST1618641496000
நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகைச்சுவை மூலம் மக்களுக்கு அவர் கொடுத்த அறிவுரைகளும் சுற்றுச்சூழலை காப்பதற்காக அவர் நட்ட மரங்களும் அவரை என்றென்றும் நினைவுப்படுத்துமென விவேக்கிற்கு நெருக்கமானவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்.
சென்னை சாலி கிராமத்தில் வைக்கப்பட்டிருக்கும் விவேக்கின் உடலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். அதே போல விவேக்குடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்டோரும் அரசியல் பிரமுகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.