“ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்பியதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை” – அரசு விளக்கம்!

 

“ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்பியதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை” – அரசு விளக்கம்!

சென்னையிலுள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திராவிற்கும் தெலங்கனாவிற்கும் மத்திய அரசு அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியது. தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் இது நடந்திருப்பது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் முறையிடப் போவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

“ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்பியதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை” – அரசு விளக்கம்!

இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் கையிலெடுத்துள்ளது. இந்த வழக்கைத் தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், தமிழ்நாடு அரசிடம் கலந்தாலோசிக்காமல் ஏன் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு சப்ளை செய்தீர்கள் என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதேபோல ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறதா என்பது குறித்துப் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டிருந்தது.

“ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்பியதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை” – அரசு விளக்கம்!

தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் தற்போது விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில், “65 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு வழங்கியதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. மாநிலத்தில் நாளொன்றுக்கு 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 250 மெட்ரிட் டன் ஆக்சிஜன் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என விளக்கம் அளிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா

இதையடுத்து தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவை பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை அறிவுறுத்திய நீதிபதிகள், தடுப்பு மருந்துகளின் விலையைக் குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கூறினர்.