கடும் நிதிபற்றாக்குறையிலும் அரசு கொரோனாவை திறம்பட கையாள்கிறது- ஓபிஆர்

 

கடும் நிதிபற்றாக்குறையிலும் அரசு கொரோனாவை திறம்பட கையாள்கிறது- ஓபிஆர்

மற்றவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்கள் அவர்களால் எந்த பயனும் இல்லை என ஒ.பி.ஆர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், தேனி மக்களவை உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத் குமார் கலந்துகொண்டனர். விழாவில் சுமார் 900க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இரண்டரை கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கடும் நிதிபற்றாக்குறையிலும் அரசு கொரோனாவை திறம்பட கையாள்கிறது- ஓபிஆர்

இவ்விழாவில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “உசிலம்பட்டி பகுதியில் விரைவில் பல திட்டங்களுக்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது போன்ற சரித்திர சாதனை படைத்த அரசு இன்னும் பல சாதனைகளை படைக்கும்” எனக் கூறினார்.

அதன்பின் பேசிய தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார், “தமிழகத்தின் நிதி நிலை கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் சரிந்திருந்தாலும் எந்த தடையின்றி மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு அதிமுக அரசு கொண்டு சேர்த்து வருகிறது, கொரோனா தொற்றையும் திறம்பட கையாள்கிறது. மற்றவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்கள் அவர்களால் எந்த பயனும் இல்லை” என பேசினார்.