இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் : பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு வருகை!

இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் :  பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு வருகை!

தமிழகத்தில் உயர்கல்வித்துறை உத்தரவின் படி இன்று முதல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் :  பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு வருகை!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள், கல்வி டிவியில் வகுப்புகள் என எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் தமிழகத்தில் அரசுக்கலை அறிவியல் கல்லூரிகளில் சேர, இதுவரை 2 லட்சத்து 80ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் :  பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு வருகை!

இன்று முதல் ஆன்லைன் வகுப்பு தொடங்கியுள்ள நிலையில் பேராசிரியர்கள் கல்லூரிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பணியாளர்களும், அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் கல்லூரிக்கு வர உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக இன்று முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் & பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.