‘நிவர்’ புயல் எதிரொலி : ஆம்னி பேருந்துகளும் இயங்காது!

‘நிவர்’ புயல் எதிரொலி : ஆம்னி பேருந்துகளும் இயங்காது!

நிவர் புயல் காரணமாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘நிவர்’ புயல் எதிரொலி : ஆம்னி பேருந்துகளும் இயங்காது!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் இந்த புயல் நாளை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இதனால் 110கி மீட்டருக்கும் அதிகமாக காற்று வீசக்கூடும் என்பதால் மின் கோபுரங்கள், மரங்கள் முறிவு, சாலையில் நீர் தேங்குதல் போன்ற இடையூறுகள் ஏற்பட கூடும். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பேருந்து சேவை மதியம் முதல் ரத்து செய்யப்படுகிறது.

‘நிவர்’ புயல் எதிரொலி : ஆம்னி பேருந்துகளும் இயங்காது!

இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் மேலும் சில மாவட்டங்களுக்கும் அரசு பஸ்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது, விழுப்புரம் வழியாக செல்லும் திருச்சி ,மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கும் அரசு பேருந்துகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூ,ர் விழுப்புரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் அரசு பேருந்து சேவை இல்லை என்று தெரிவவிக்கப்பட்டுள்ளது.

‘நிவர்’ புயல் எதிரொலி : ஆம்னி பேருந்துகளும் இயங்காது!

இந்நிலையில் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் , செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் ஆம்னி பஸ் சேவையில்லை என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.