தமிழகத்தில் குறைகிறதா பாதிப்பு?.. நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் கொரோனா விவரங்கள் இதோ!

 

தமிழகத்தில் குறைகிறதா பாதிப்பு?.. நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் கொரோனா  விவரங்கள் இதோ!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தான் வருகின்றன. அதே போல கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்ட நிர்வாகங்கள், பாதிப்புக்கு ஏற்றாற்போல அந்தந்த பகுதிகளில் ஊரடங்கை நீடித்து வருகின்றனர். இதனிடையே ஒவ்வொரு மாவட்டமாக முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இது ஒரு புறமிருக்க, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி அடைந்ததையடுத்து, இரண்டாம் கட்ட பரிசோதனையாக சில நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் சாதகமாகவே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் குறைகிறதா பாதிப்பு?.. நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் கொரோனா  விவரங்கள் இதோ!

இந்த நிலையில் நெல்லை, திருப்பத்தூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகி இருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் மேலும் 164 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 7,012 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 3,664 ஆக உயர்ந்துள்ளது. மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு 1,799 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று பாதிப்பு குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.