டோக்கன் இல்லையென்றாலும் பொங்கல் பரிசு வழங்கப்படும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

 

டோக்கன் இல்லையென்றாலும் பொங்கல் பரிசு வழங்கப்படும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “ பொங்கல் பரிசு தொகுப்பு 2 கோடியே 6 லட்சம் குடும்பம் என்பது 2 கோடியே 7 லட்சமாக உயர்ந்துவிட்டது. அத்தனை கார்டுகளுக்கும் தொகுப்பு வழங்கப்படும். அனைத்து நியாயவிலைக்கடைகளை ஆய்வு செய்ய உள்ளேன். சரியாக பொருட்கள் கொடுக்கப்படுகிறதா? பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வேன். பொங்கல் பரிசு வழங்குவதில் திமுக தான் அரசியல் செய்யும். நாங்கள் வழங்கும் பரிசுத்தொகுப்பில் இரட்டை இலை சின்னமோ, ஜெயலலிதா படமோ நாங்கள் போடவில்லை. திமுக ஆட்சியில் தான் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது காழ்ப்புணர்ச்சி காரணமாக குறைகூறுகின்றனர்.

டோக்கன் இல்லையென்றாலும் பொங்கல் பரிசு வழங்கப்படும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

எதைத்தான் நல்லதாக ஸ்டாலின் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுப்போட்டியில் சூழலுக்கேற்ப முதல்வர் கலந்துகொள்வது குறித்து முடிவெடுப்பார். தம்பியின் திறமை அண்ணனுக்கு தெரியும். மு.க.அழகிரியே ஸ்டாலினை முதல்வராக முடியாது என கூறிவிட்டார். மக்கள் எடப்பாடி பழனிச்சாமியை தான் முதல்வராக எண்ணுகிறார்கள். அமித்ஷா துக்ளக் விழாவிற்கு தான் வருகிறார். அவருடைய நிகழ்வு நிமிடத்திற்கு நிமிடம் மாறுபடும். அவர் வந்த பிறகு தான் தெரியும்” எனக் கூறினார்.