மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 72 மணி நேரத்தில் 25,617 பேர் பலன்

 

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 72 மணி நேரத்தில் 25,617 பேர் பலன்

திமுக சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்குப்பகுதி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முன்களபணியாளர்கள் மற்றும் முடிதிருத்தும் பணியாளர்களுக்கு அரிசி,காய்கறி, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நலதிட்டங்கள் வழங்குதல் போரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 10லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கு நிகழ்ச்சி வளசரவாக்கத்தில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி ஏற்பாட்டில் நடைபெற்றது.

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 72 மணி நேரத்தில் 25,617 பேர் பலன்

இதில் கலந்துகொண்டு பேசிய சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், “கொரோனா இன்னும் ஒழியவில்லை. தனிமனித இடைவெளி சற்றே கேள்விக்குறியாகியுள்ளது. இதுவரை 2.5 கோடி தடுப்பூசி இது வரை போடப்பட்டுள்ளது.

3 மாத காலத்தில் மட்டும் 1கோடியே 90 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழகத்தை தவிர உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்படவில்லை.

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 72 மணி நேரத்தில் 25617 பேர் பயன்பெற்று உள்ளனர். கொரோனாவால் 60% உயிரிழப்பு நீரிழிவு நோய், உடல் இரத்த அழுத்தம், உடல் பருமன் நோய் உள்ளவர்களே” என தெரிவித்தார்.