ஒரே நாளில் ஆண் – பெண் தலை துண்டித்து கொலை :திண்டுக்கல் பதற்றம்

 

ஒரே நாளில் ஆண் – பெண் தலை துண்டித்து கொலை :திண்டுக்கல் பதற்றம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(41) ஜவுளி வியாபாரியான இவர் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது வழக்கு இருந்து வந்த நிலையில் கடந்த புதன்கிழமை இரவு அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, தலையை மட்டும் துண்டித்து எடுத்துக் கொண்டு சென்றது.

ஒரே நாளில் ஆண் – பெண் தலை துண்டித்து கொலை :திண்டுக்கல் பதற்றம்

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்று அனுமந்தராயன் கோட்டை உள்ளே செல்லும் தெருவில் தலையை வீசிவிட்டு அந்த கும்பல் தப்பியது. கொலைக்கான காரணம் குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய நிர்மலாதேவி கடந்த புதன்கிழமையன்று திண்டுக்கல்லில் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட பரபரப்பில் அதே பாணியில் இந்த கொலை நடந்தது போலீசாருக்கு பெரும் தலைவலியாக மாறிப்போனது.

இந்த கொலை வழக்கில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு திண்டுக்கல் போலீசார் தேடி வந்த நிலையில் ஆறு பேர் கைதாகினர். இதில் பிடிபட்ட மன்மதன் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது திண்டுக்கல் -கரூர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து கால் முறிவு ஏற்பட்டிருக்கிறது.

திண்டுக்கல் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். இந்த வழக்கில் பிடிபட்ட 5 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் ஆண் – பெண் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.