வரும் 31 ஆம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்

வரும் 31 ஆம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 31ஆம் தேதி சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில், கேரள மக்கள் அதிகம் வசிப்பதால், ஓணம் பண்டிகை நாளில், உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வரும், 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருப்பதால் அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்களுக்கு, உள்ளூர் விடுமுறை என சென்னை, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வரும் 31 ஆம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை- மாவட்ட ஆட்சியர்

அதற்கீடாக செப்டம்பர் 12 ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.