உள்ளாட்சி தேர்தல் : ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று ஆலோசனை!

 

உள்ளாட்சி தேர்தல் : ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று ஆலோசனை!

உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக சார்பில் இன்று முதல் மாவட்டவாரியாக ஆலோசனை நடைபெற உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் : ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் ,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வருகின்ற செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக முதல்வர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

உள்ளாட்சி தேர்தல் : ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று ஆலோசனை!

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்போது மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இதைத் தொடர்ந்து வரும் 8ஆம் தேதி வரை ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களையும் தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது