சகோதரர் வசந்தகுமாரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி! குமரி ஆனந்தன் மருத்துவமனையில் அனுமதி!!
Aug 28, 2020, 23:16 IST1598636771000
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் காலமானார். அவருக்கு வயது 70. ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொரோனா உறுதியானதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 7 மணியளவில் எம்.பி. வசந்தகுமார் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சகோதரர் வசந்தகுமாரின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சியுற்ற குமரி ஆனந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குமரி ஆனந்தனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமாக குமரி அனந்தன் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.