உடுமலை சங்கர் கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை கேவியட் மனுத் தாக்கல்!

 

உடுமலை சங்கர் கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை கேவியட் மனுத் தாக்கல்!

கடந்த 2015 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் கவுசல்யா என்ற பெண்ணை அவரின் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டே சங்கர் கவுசல்யாவின் உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தும், அவரது தாய்மாமன் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும் திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடுமலை சங்கர் கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை கேவியட் மனுத் தாக்கல்!

அதன் பின்னர் அவர்கள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மரண தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த அனைத்து வழக்கின் தீர்ப்புகளும் கடந்த 22 ஆம் தேதி வெளியானது. அதில், கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்தும் மற்ற 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அவர்கள் 3 பேரின் விடுதலை உறுதி செய்யப்பட்டது.

உடுமலை சங்கர் கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை கேவியட் மனுத் தாக்கல்!

 

ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். தனது விடுதலையை எதிர்த்து அரசு தரப்பிலோ, வேறு ஒருவர் தரப்பிலோ மேல்முறையீடு செய்யப்பட்டால் தன்னையும் அதில் சேர்க்க வேண்டும் என்றும் கோரி கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.