வெறுப்புணர்வை தூண்டி, வாக்கு வங்கிகளாக மாற்றும் இழிவு அரசியலை பாஜக செய்கிறது- கனிமொழி

வெறுப்புணர்வை தூண்டி, வாக்கு வங்கிகளாக மாற்றும் இழிவு அரசியலை பாஜக செய்கிறது- கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “பாஜக எதற்காக இயங்குகிறது, அதன் உண்மையான முகம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படைக் கொள்கை வெறுப்புணர்வை தூண்டி, வாக்கு வங்கிகளாக மாற்றும் அரசியலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

வெறுப்புணர்வை தூண்டி, வாக்கு வங்கிகளாக மாற்றும் இழிவு அரசியலை பாஜக செய்கிறது- கனிமொழி

இதனை தமிழகம் என்றும் ஏற்றுக்கொள்ளாது. இப்படிப்பட்ட அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை பாரதிய ஜனதா கட்சி புரிந்து கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் தங்களை எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். அடிப்படையில் அந்த இயக்கம் எதற்காக நிற்கிறது. அந்த இயக்கத்தின் (பாஜக) உண்மையான முகம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.