கொரோனா உருமாறியது போல திமுகவும் உருமாறியுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்!

 

கொரோனா உருமாறியது போல திமுகவும் உருமாறியுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை வில்லிவாக்கத்தில், அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “இந்த ஆண்டு கொரோனா இல்லாத ஆண்டாக இருக்க வேண்டும். திமுக ஊழலில் பெருத்த மாபெரும் இயக்கம், உத்தமர் போல ஊழலில் மறு உருவம் பெற்றது உள்ளது திமுக. எப்படி கொரோனா உருமாறி உள்ளதே அது போல. தமிழகத்தைப் பொருத்தவரை வேளாண் சட்டங்களால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் வராது. வேளான் சட்டங்களில் தூங்குவது போல நடிக்கிறது திமுக

கொரோனா உருமாறியது போல திமுகவும் உருமாறியுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்!

வேளாண் சட்டங்கள் தொடர்பாக அவசர சட்டத்தை கொண்டு வருவதற்கான சட்டப்பேரவைக் கூட்டம் தேவையில்லை சட்டப்பேரவை கூட்டம் எப்போது கூட்டவேண்டும் என சட்டப்பேரவைக்கு தெரியும். 2019ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி இல்லை, அப்போது அதிமுக தலைமையில் தான் கூட்டம் இருந்தது. அதுதான் இப்போதும்! அதிமுக தலைமையில்தான் கூட்டணி. தமிழகத்திலும் ஜிஎஸ்டி அதிகமாயிருக்கிறது” எனக் கூறினார்,