வளைகாப்பு நிகழ்ச்சி முக்கியமா? ஜிஎஸ்டி கூட்டம் முக்கியமா? அமைச்சர் பிடிஆரை வறுத்தெடுக்கும் பாஜக

 

வளைகாப்பு நிகழ்ச்சி முக்கியமா? ஜிஎஸ்டி கூட்டம் முக்கியமா? அமைச்சர் பிடிஆரை வறுத்தெடுக்கும் பாஜக

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பொறுப்பற்ற முறையில் அவள் பதிலளித்தார் என்று நெட்டிசன்கள் வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது என்று அவர் கூறியதை வைத்து வளைகாப்பு ராஜன் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

வளைகாப்பு நிகழ்ச்சி முக்கியமா? ஜிஎஸ்டி கூட்டம் முக்கியமா? அமைச்சர் பிடிஆரை வறுத்தெடுக்கும் பாஜக

டெல்லியில் நடந்திருந்தால் ஒரே விமானத்தில் போயிருப்பேன். லக்னோவில் நடந்ததால் மூன்று விமானங்களில் மாறிமாறி போக வேண்டும். ஒருநாள் ஆகிவிடும். அதனாலும் போகவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். எனக்கு கடைசி நேரத்தில் தான் அழைப்பு வந்தது. அதுமட்டுமல்லாமல் எதைப்பற்றி கூட்டத்தில் விவாதிக்க போகிறோம் என்பது குறித்த விவரங்களும் கடைசி நேரத்தில் தான் எனக்கு தெரிவிக்கப்பட்டது. இதுவரைக்கும் ஆன்லைன் வழியாக கூட்டம் நடந்து வந்த நிலையில் திடீரென்று நேரடியாக லக்னோ வரச்சொல்லி அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார் .

வளைகாப்புராஜன், மூன்று விமானம் என்பதை வைத்து அமைச்சரை வறுத்தெடுக்கும் நிலையில், எனது கொளுந்தியா மகள் பூப்புனித நீராட்டு விழாவில் நான் பங்கேற்க இருப்பதால் டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை- மதுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் என்று தொலைக்காட்சியில் வந்ததுபோல் ஒருவர் பதிவிட்டதால், வடிகட்டிய முட்டாள்தனம் கூட்டம் நடந்தது. டெல்லியில் இல்லை லக்னோவில். எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும். பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா என்று ஆவேசப்பட்டுள்ளார்.

வளைகாப்பு நிகழ்ச்சி முக்கியமா? ஜிஎஸ்டி கூட்டம் முக்கியமா? அமைச்சர் பிடிஆரை வறுத்தெடுக்கும் பாஜக

நம்ம நிதி மந்திரி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்ல ஸ்டாலினிடம் தனிவிமானம் கேட்டாராம். நானும் என் மனைவியும் மட்டுமே தனி விமானத்தில் பயணிக்கும் நிலையில் இவர் எப்படி கேட்கலாம் என கண் சிவக்க, அவர் கூட்டத்திற்கு போகலையாம். தொரைக்கு தனி விமானம் கேட்குதோ? வெளங்கிடும் என்று சௌதாமணி என்பவர் டுவிட்டரில் பதிவிட, அதற்கு அமைச்சர் பிடிஆர், ஒன்றுக்கொன்று முறன்பாடான 2 பொய்களை சொல்ற முட்டாள்களே..நான் கூட்டத்திற்கு செல்லாதது இல்லாத விழாவிற்காகவா? அல்லது நான் எப்போதும் புறக்கணிக்கும் தனிவிமானம் இல்லாததாலா? கூட்டம் டெல்லியிலா? லக்னோவிலா? அநாகரீகமாக எனது மனைவியை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள், மாட்டுச்சாண மூளை கொண்டவரே கொந்தளித்திருக்கிறார்.

வளைகாப்பு நிகழ்ச்சி முக்கியமா? ஜிஎஸ்டி கூட்டம் முக்கியமா? அமைச்சர் பிடிஆரை வறுத்தெடுக்கும் பாஜக

இதையடுத்து, ’’ஒரே கேள்வி! ஜிஎஸ்டி கூட்டத்தை விட வளைகாப்பு நிகழ்ச்சி முக்கியமா ? 20,000 கோடி நிலுவை உள்ளது என்று கூறியது உண்மையா இல்லையா? உண்மையெனில் தமிழகத்திற்கு வர வேண்டிய 20000 கோடியை விட வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது முக்கியமா?

ஜிஎஸ்டி மாநில உரிமைகளை பறிக்கிறது என்று சொன்னீர்களே? மாநில உரிமைகளை கேட்டு பெறுவதை விட, வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது முக்கியமா? இதற்கு தான் தமிழக நிதியமைச்சரிடம் பதிலை எதிர் பார்க்கிறோம். ஆனால், அதை விடுத்து சகட்டு மேனிக்கு ட்விட்டரில் எதை எதையெல்லாமோ பதிவிட்டு கொண்டிருக்கிறார்’’என்று எரிச்சலடைகிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.