இறுதிவரை மனந்தளராது போராடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
Aug 6, 2021, 11:01 IST1628227895000
ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் இறுதிவரை மனந்தளராது போராடியதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் இறுதிவரை மனம் தளராது போராடியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியினரின் ஆட்டம் பதக்கம் பெற்ற பிறரின் முயற்சிகளுக்கு சற்றும் குறைவில்லாதது. முதல் முறையாக ஒலிம்பிக்கின் அரையிறுதி சுற்று வரை இந்தியாவை கொண்டு சென்றதற்காகவும், பிரிட்டன் அணிக்கு எதிரான போட்டியில் இறுதி வரை மனம் தளராது போராடியதற்காகவும் நமது அணியின் ஒவ்வொரு வீராங்கனையையும் நான் நெஞ்சாரப் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.