ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் எஸ்.ஆர் (95) உடல்நலக் குறைவால் காலமானார்

 

ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் எஸ்.ஆர் (95) உடல்நலக் குறைவால் காலமானார்

டெல்லி: ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் எஸ்.ஆர் (வயது 95) உடல்நலக் குறைவால் காலமானார்.

மூன்று முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் எஸ்.ஆர் இரண்டு வாரங்களுக்கு மேலாக பல சுகாதார பிரச்சினைகளை எதிர்த்துப் போராடி வந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் அவர் தனது 95-வது வயதில் இன்று காலை 6:30 மணியளவில் காலமானார். பல்பீர் கடந்த மே 18-ஆம் தேதி முதல் அரை கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அதிக காய்ச்சலுடன் மூச்சுக்குழாய் நிமோனியாவால் அவரது மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டது.

ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் எஸ்.ஆர் (95) உடல்நலக் குறைவால் காலமானார்

பல்பீர் சிங்குக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 16 மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் பல்பீரும் தேர்வு செய்யப்பட்டார். ஒலிம்பிக்கின் ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் ஒரு நபர் அடித்த அதிகபட்ச கோல்களுக்கான உலக சாதனை அவர் வசம் இன்னும் உள்ளது.