அதி தீவிர புயலாக மாறிய டவ்-தே… இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

 

அதி தீவிர புயலாக மாறிய டவ்-தே… இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத் தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றுள்ளது. டவ்-தே என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புயல் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது. இது 18ஆம் தேதி மாலை குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் நாலியாவுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதி தீவிர புயலாக மாறிய டவ்-தே… இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இந்த புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவின் 5 மாவட்டங்களை இந்த புயல் புரட்டி போட்டுள்ளது. இந்த நிலையில், டவ்-தே புயல் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதி தீவிர புயலாக மாறிய டவ்-தே… இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், டவ்-தே புயல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் வரும் 20ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.