5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

 

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல நீர்நிலைகள் நிரம்பி, பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வலிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கடலூர், விழுப்புரம்ம், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, விருதுநகர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கேரள, கர்நாடக கடற்பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.