பார்சல் சேவையில் எச்சில் தொடுவது, ஊதுவது கூடாது : கடைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

 

பார்சல் சேவையில் எச்சில் தொடுவது, ஊதுவது கூடாது : கடைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. உணவுப் பொருட்கள், மளிகை கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யும் கடைகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பார்சல் சேவையில் எச்சில் தொடுவது, ஊதுவது கூடாது : கடைகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து தமிழக அரசு ஊரடங்கு நீட்டித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் , மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழகத்திலும் சில செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு அதிகரித்தள்ளது. இது தவிர்க்க முடியாத ஒன்று. பார்சல் செய்யும் ஊழியர்கள் எச்சில் தொட்டு உறைகளை எடுப்பது, பொருட்களை உள்ளே போடுவதற்கு வாயால் ஊதுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இது கொரோனா பரவலை அதிகரிக்கும். இதுபோன்ற செயல்களில் அபாயம் இருப்பதை கவனத்தில் கொண்டு ஊழியர்களுக்கு கடை உரிமையாளர்கள் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.