அவன் போராளிடா;அவனை எப்படிடா தீவிரவாதிங்கன்னு சொல்லுவீங்க.. காந்தி,நேதாஜி, பகத்சிங்தான் தீவிரவாதிங்க..வைரலாகும் இயக்குநர் அமீர் பேச்சு

 

அவன் போராளிடா;அவனை எப்படிடா தீவிரவாதிங்கன்னு சொல்லுவீங்க.. காந்தி,நேதாஜி, பகத்சிங்தான் தீவிரவாதிங்க..வைரலாகும் இயக்குநர் அமீர் பேச்சு

ஆப்கானிஸ்தான் அரசை தாலிபான்கள் மெல்ல மெல்ல கைப்பற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பயந்து அந்நாட்டைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பாகிஸ்தான், ஈரான், இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி ஓடும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. தாலிபான்களின் கொடுமையான ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உலகமே இருந்து வரும் சூழலில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர் அவர்களுக்கு ஆதரவாக பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அவன் போராளிடா;அவனை எப்படிடா தீவிரவாதிங்கன்னு சொல்லுவீங்க.. காந்தி,நேதாஜி, பகத்சிங்தான் தீவிரவாதிங்க..வைரலாகும் இயக்குநர் அமீர் பேச்சு

அந்த வீடியோவில், ‘’எங்களை தீவிரவாதிகள் என்று சொல்கிறார்கள் என்கிறீர்களே.. ஆப்கானிஸ்தானில் போராடும் தாலிபன்களை, அவர்களை எல்லாம் போராளிகள் என்று தைரியமாக சொல்ல மறுத்துவிட்டார்கள். ஆப்கனில் உள்ள தாலிபன்கள் போராளிகள். கண்ணியமாக, காலரை உயர்த்தி சொல்லுங்கள்.. அவன் போராளிடா..அவனை எப்படிடா தீவிரவாதிங்கன்னு சொல்லுவீங்க. மண்ணுக்காகவும், மக்களுக்காகவும், தங்களுடைய சொந்த கொள்கைக்காகவும், அமெரிக்காவை எதிர்த்து போராடும் போராளி. தாலிபன்கள் போராளிகள் என்று இஸ்லாமியர்கள் அனைவரும் தைரியமாக சொல்ல வேண்டும். உடனே புடுச்சி யாரும் உள்ளே போட்டுட மாட்டான். நீ சொல்லுற தீவிரவாதின்னு. அப்படிப்பார்த்தா பகத்சிங் தீவிரவாதிதான். காந்திகூட தீவிரவாதிதான். சுபாஷ் சந்திரபோஸ் தீவிரவாதிதான். தான் கொண்ட கொள்கையில் தீவிரமாக இறங்கும்போது தீவிரவாதிதான். ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்கள் போராளிகள் என்று வெட்கப்படாமல் சொல்லுங்கள்’’ என்று பேசியிருக்கிறார்.

ஆண்களின் துணையுடன் மட்டுமே பெண்கள் வெளியே வர வேண்டும். சுண்டு விரல் கூட வெளியே தெரியாத அளவிற்கு ஆடை உடுத்த வேண்டும். அதை மீறினால் சவுக்கடி அல்லது மரண தண்டனைதான். பெண் குழந்தைகள் படிக்க தடை. பெண்களின் விருப்பம் இல்லாமல் அவர்களை அடிமைப்படுத்தி கடும் சித்திரவதை செய்து அவர்களை திருமணம் செய்து கொள்ளும் உரிமை இருக்கிறது. இப்படியான கட்டுப்பாடுகளால் தாலிபான்கள் மீது மிகக் கொடூரமானவர்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அமீரின் அவர்களுக்கு ஆதரவான பேச்சும் வைரலாகி வருவது குறித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

’’ஆப்கன் தாலிபான்கள் போராளிகள். இயக்குநர் அமீர் கண்டுபிடிப்பு. இந்த மாதிரி நாளு பேர் 40 இஸ்லாமிய இளைஞர்களைக் கெடுப்பதால் தான் ஆப்கன், சிரியா எனப் பல நாடுகளில் இஸ்லாமிய மக்கள் வாழ்வு நாசமாகிறது. இயக்குநர் அமீர் தாலிபான்களை ஆதரிக்க மதம் தவிர என்ன உருப்படியான காரணம் இருக்க முடியும்?’’என்று கேட்கிறார் சமூக ஆர்வலர் மாரிதாஸ்.