எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் ரூ3,214 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.6 டிவிடெண்ட் அறிவிப்பு

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் ரூ3,214 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.6 டிவிடெண்ட் அறிவிப்பு

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ3,214 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

நம் நாட்டின் 3வது பெரிய சாப்ட்வேர் சேவைகள் வழங்கும் நிறுவனமான எச்.சி.எல். டெக்னாலஜிஸ் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் 2021 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ3,214 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 9.9 சதவீதம் அதிகமாகும்.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் ரூ3,214 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.6 டிவிடெண்ட் அறிவிப்பு
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

2021 ஜூன் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் வருவாயாக ரூ.20,068 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் 12.5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜூன் காலாண்டு இறுதி நிலவரப்படி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.76 லட்சமாக உள்ளது.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் லாபம் ரூ3,214 கோடி.. பங்கு ஒன்றுக்கு ரூ.6 டிவிடெண்ட் அறிவிப்பு
எச்.சி.எல். டெக்னாலஜிஸ்

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.6 டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.29 சதவீதம் குறைந்து ரூ.977.30ஆக இருந்தது.