உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி அளித்த முதலமைச்சருக்கு நன்றி- ஜிம் அசோசியேஷன்
Aug 6, 2020, 18:36 IST1596719162000
ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஜிம்கள் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும் ஜிம்கள் இயங்குவதற்கான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வழிகாட்டு செயல்முறைகளை ஜிம்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மக்கள் சேவைக்காக சிறப்பாக பணியாற்றுவதற்கு ஜும் மற்றும் ஃபிட்னஸ் துறை செயல்படவும் உடற்பயிற்சி கூடங்களை திறப்பதற்கு அனுமதி அளித்த முதலமைச்சருக்கு தொழிலாளர் மற்றும் எங்கள் குடும்பத்தில் சார்பாக தமிழ்நாடு ஜிம் ஓனர்ஸ் ஆசோசியேஷன் நன்றிகளை தெரிவித்துள்ளது.