வங்கியில் கவரிங் நகைகளுக்கு தங்க கடன் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது!

வங்கியில் கவரிங் நகைகளுக்கு தங்க கடன் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது!

போலி நகைகளை வைத்து 101 முறை தங்க கடன் வழங்கிய நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் இயங்கி வரும் சிண்டிகேட் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக திருவல்லிக்கேணியை சேர்ந்த முரளி என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இவர் கவரிங் நகைகளை வைத்து வங்கியில் நகை கடன் மோசடி செய்து வந்தது சிண்டிகேட் வங்கியின் மேலாளர் பிரவீன்குமாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

வங்கியில் கவரிங் நகைகளுக்கு தங்க கடன் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது!

அதாவது நகைக் கடனுக்காக வங்கிக்கு வந்த நபரின் மீது வங்கி மேலாளர் பிரவீன்குமார் சந்தேகித்து நகைகளை சரி பார்த்த போது இந்த ஒட்டுமொத்த மோசடி பின்னணியில் முரளி இருப்பது தெரியவந்துள்ளது.

வங்கியில் கவரிங் நகைகளுக்கு தங்க கடன் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது!

நகை மதிப்பீட்டாளர் முரளி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் அவர்களை வாடிக்கையாளர்கள் போல் சித்தரித்து கவரிங் நகைகளுக்கு தங்க கடன் வழங்கியுள்ளார். மேலும் தங்க நகைகளை மற்ற பணியாளர்கள் பார்த்திராத வண்ணம் அதனை உடனே வாங்கி சென்று லாக்கரில் வைத்து விடுவது வழக்கமாம். அப்படி இதுவரை 101 முறை போலி கணக்குகளை தொடங்கி நகை கடன் மூலம் ரூபாய் ஒரு கோடியே 2 லட்சத்து 36 ஆயிரம் பணத்தை அவர் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நகை கடன் தொகையில் இருந்து சிறிது தொகையை கொடுத்து விட்டு மீதித் தொகையை முரளி தன்வசப்படுத்தி வந்து உள்ளார் .

வங்கியில் கவரிங் நகைகளுக்கு தங்க கடன் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது!

இந்த வழக்கில் நகை மதிப்பீட்டாளரான முரளி, அவருக்கு உதவியாக இருந்த போலீஸ்காரரின் மனைவியான சாந்தியையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த மெகா மோசடி போலீஸாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.