சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.7 அதிகரித்துள்ளது.

பொதுமுடக்க காலத்தில் தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்தது அனைவரும் அறிந்தவையே. அச்சமயத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவால், தங்கக்காசுகளின் மீதான முதலீடு அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம். அதன் பின்னர், தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்த நிலையில், தங்கம் விலை கணிசமாக குறைந்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தங்கம் விலையில் பெரிதாக மாற்றம் ஏதுமின்றி மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது.

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.7 உயர்ந்து ரூ.4,725க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,800க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,500க்கும் விற்பனையாகிறது.