கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொளுந்துவிட்டு எரிந்த அம்னி பேருந்து!

 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொளுந்துவிட்டு எரிந்த அம்னி பேருந்து!

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பழுதான பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்த தனியார் பேருந்து திடீர் என்று தீ பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி அருகில் நின்றுக்கொண்டிருந்த இரு பேருந்துகளும் தீப்பிடித்து எரிந்தன. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். விபத்துக்கான குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொளுந்துவிட்டு எரிந்த அம்னி பேருந்து!

ஜாய் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்துகள் சர்வீஸ் செய்வதற்காக கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த பேருந்தில்தான் தற்போது தீ விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டும் இந்த நிறுவனத்தின் 3 தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன. அந்த விபத்து ஏற்பட்ட அதே இடத்திலேயே தற்போது மீண்டும் விபத்து நடந்துள்ளது.