இறுதி ஆண்டு செமெஸ்டர் தேர்வுகளும் ரத்தா? அமைச்சர் அன்பழகன் பதில்

 

இறுதி ஆண்டு செமெஸ்டர் தேர்வுகளும் ரத்தா? அமைச்சர் அன்பழகன் பதில்

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இறுதி ஆண்டு செமெஸ்டர் தேர்வுகளும் ரத்தா? அமைச்சர் அன்பழகன் பதில்

இதனிடையே பொறியியல், தொழில்கல்வி உள்ளிட்ட அனைத்து பட்டப்படிப்புகள் இறுதித் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டன. இதனால் கல்லூரி இறுதி பருவத் தேர்வு ரத்து செய்யக் கோருவது பற்றி யுஜிசி, மத்திய- மாநில அரசுகள் 2 வாரத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று காலை முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இறுதி ஆண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்படுகிறதா என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பதில் அளித்துள்ளார். கல்லூரி இறுதி ஆண்டு செமெஸ்டர் தேர்வை ரத்து செய்வது குறித்து முதல்வர் மத்திய மனித மேம்பாட்டுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்த பதிலுக்கு பின் முதல்வர் முடிவுகளை அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.