நிறைய செல்வம் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கை…சிறுமியை நரபலிக் கொடுத்த தந்தை!

 

நிறைய செல்வம் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கை…சிறுமியை நரபலிக் கொடுத்த தந்தை!

புதுக்கோட்டை மாவட்டம் நொடியூர் கிராமத்தில் மாந்திரீக நம்பிக்கையால் தந்தையே கொடூரமாக மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தில் மூட நம்பிக்கையின் காரணமாக 13 வயது சிறுமியை தந்தையே கொலை செய்த நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தந்தை பன்னீர் மற்றும் அவரது உறவினர் குமார் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

நிறைய செல்வம் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கை…சிறுமியை நரபலிக் கொடுத்த தந்தை!

இந்நிலையில் பெண் மந்திரவாதி ஒருவரை காவல் நிலையம் அழைத்து வந்த தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் மந்திரவாதி கூறியதன் அடிப்படையில்தான் தனது மூன்றாவது மகளை கொலை செய்ததாகவும், அப்படி செய்தால் தனக்கு அதிக செல்வம், பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பன்னீர் தனது 13 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையில் அம்பலமானது. சிறுமியை கொலை செய்த வழக்கில் இரண்டாவது குற்றவாளி குமாரை புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் புதுக்கோட்டை சிறுமி நரபலி விவகாரத்தில் கைதான பன்னீரின் 2வது மனைவி மூக்காயி மர்ம மரணமான முறையில் கடந்த 2 நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். சிறுமி நரபலிக்கு மூக்காயியும் உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.