ஓபிஎஸ் இல்லாமல் முக்கிய நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை!

 

ஓபிஎஸ் இல்லாமல் முக்கிய நிர்வாகிகளுடன்   ஈபிஎஸ் ஆலோசனை!

அதிமுக தலைமையகத்தில் 9 மாவட்ட செயலாளர்களுடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

ஓபிஎஸ் இல்லாமல் முக்கிய நிர்வாகிகளுடன்   ஈபிஎஸ் ஆலோசனை!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தோல்வியை தழுவியது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஸ்டாலின் அரியணையேறி உள்ளார். சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினரால் ஒருமனதாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இதில் ஓபிஎஸ் தரப்பிற்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டு வருவதுடன் அரசு நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்காமல் தவிர்த்து வருகின்றனர். அதே சமயம் அரசு நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ்க்கு அமைச்சருக்கு நிகராக மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது

ஓபிஎஸ் இல்லாமல் முக்கிய நிர்வாகிகளுடன்   ஈபிஎஸ் ஆலோசனை!

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். எதிர்க்கட்சித் தலைவராக தேர்வான பிறகு முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனையில் சென்னையை சேர்ந்த 9 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.கொண்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் தோல்வி குறித்து மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், தி.நகர் சத்யா, விருகை ரவி, பெஞ்சமின் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்காத நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.