உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு உள்ளதா? அப்போ பண கஷ்டம் பறந்து விடும்!!

 

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு உள்ளதா? அப்போ பண கஷ்டம் பறந்து விடும்!!

சங்கு என்பது ஆன்மீகத்திலும், பூஜைகளிலும் மிகவும் முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது. குறிப்பாக இந்த வீட்டில் வலம்புரிச் சங்கு இருக்கிறதோ அந்த வீட்டில் லஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.
சங்கு குபேரனின் அருளையும், குபேர யோகத்தையும் ஒன்று சேர பெற்றது என்று கூறப்படுகிறது. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் , துளசி இட்டு பூஜை செய்து வந்தால் நம் முன்னோர்களின் ஆசியை பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.

சங்கு நமக்கு ஏற்பட்ட தோஷங்களை நீக்கும் வல்லமை கொண்டது. வீட்டில் உள்ள கஷ்டங்கள், கடன் தொல்லைகள் யாவும் நீங்கிவிடும். தனம் தானியம் பெருகும்.வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருந்து அருள் பாலிக்கிறார் என்ற நம்பிக்கை உண்டு. குடும்பத்தில் அமைதி, நிம்மதி ஆகியவற்றை அளிக்கும் வலம்புரி சங்கு ,வாஸ்து தோஷத்தை நீக்கி விடவும்.

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு உள்ளதா? அப்போ பண கஷ்டம் பறந்து விடும்!!

செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடக்கும் என்று நம்பப்படுகிறது . அதேபோல் வலம்புரி சங்கிற்கு பாலாபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால் கடன் தொல்லைகள் நீங்கும்.

உங்கள் வீட்டில் வலம்புரி சங்கு உள்ளதா? அப்போ பண கஷ்டம் பறந்து விடும்!!

வலம்புரி சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி, சூன்யங்கள், ஏவல்கள், தீவினைகள் நெருங்காது. உங்கள் பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி இட்டு , சங்கு வைத்து பூ அலங்காரம் செய்து , சந்தனம் , குங்குமம் இட்டு பூஜை செய்து வாருங்கள் . அப்படி செய்து வரும் பட்சத்தில் உங்கள் இல்லத்தில் தானியங்கள் பஞ்சமிருக்காது. உணவு பற்றாக் குறையே இருக்காது; மேலும் தம்பதி இடையே ஒற்றுமை ஓங்கும்.