திமுக எம்.பி. கதிர் ஆனந்தை மிரட்டியது யார்?

 

திமுக எம்.பி. கதிர் ஆனந்தை மிரட்டியது யார்?

திமுக எம்.பி. கதிர் ஆனந்தை மிரட்டியது யார் என டெல்லி சாணக்கியபுரி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

திமுக எம்.பி. கதிர் ஆனந்தை மிரட்டியது யார்?

நாடளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்று மக்களவையில் பேசிய வேலூர் எம்பி கதிர் ஆனந்த், இரண்டு பேர் நான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து உளவுத்துறை அதிகாரிகள் என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்பு நான் மக்களவையில் என்ன பேச போகிறேன் என்று கேட்டு மிரட்டினார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, “உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் எழுத்துப்பூர்வமாக என்னிடம் புகார் தெரிவிக்கலாம்” என்று கூறினார்.

திமுக எம்.பி. கதிர் ஆனந்தை மிரட்டியது யார்?

இந்நிலையில் திமுக எம்.பி. கதிர் ஆனந்தை மிரட்டியது யார் என டெல்லி சாணக்கியபுரி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். உளவுத்துறையினர் எனக் கூறி தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து தன்னை சிலர் மிரட்டியதாக எம்பி கதிர் ஆனந்த்குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று வருகை பதிவேடு, சிசிடிவி பதிவு உள்ளிட்டவற்றை கேட்டுள்ளனர்.