கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டமா? சபாநாயர் தனபால் நேரில் ஆய்வு!

 

கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டமா? சபாநாயர் தனபால் நேரில் ஆய்வு!

தமிழகத்தில் ஆண்டுதோறும் இரண்டு முறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்படுவது வழக்கம். இந்த முறை கொரோனா வைரஸ் பரவியதால், சட்டபேரவை கூட்டத் தொடரை எப்படி நடத்துவது என சந்தேகம் எழுந்தது. அதுமட்டுமில்லாமல் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டபேரவை கூட்டத்தொடரின் போது எம்.எல்ஏ ஒருவருக்கு கொரோனா உறுதியானதால், அவசரஅவசரமாக கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டது.

கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டமா? சபாநாயர் தனபால் நேரில் ஆய்வு!

அதே போன்ற சூழல் தமிழகத்திலும் நிலவக்கூடாது என்பதால், சபாநாயகர் தலைமையில் கூட்டத்தொடரை எங்கே நடத்துவது என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, கொரோனா அச்சுறுத்தல் மற்றும் இட நெருக்கடியில் காரணமாக மாற்று இடத்தில் கூட்டத்தை நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்தலாமா என்பது குறித்து சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். செப்டம்பர் 24 ஆம் தேதிக்குள் கூட்டத்தொடரை நடத்தி முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.