பள்ளி ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த… பள்ளிக் கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!

 

பள்ளி ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த… பள்ளிக் கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!

பள்ளி ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த கணினி பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத் திறன் வளர்ச்சி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இரண்டாம் அலை படிப்படியாக குறைந்திருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

பள்ளி ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த… பள்ளிக் கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!

இந்த நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த கணினி பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத் திறன் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன் படி, 5 நாட்கள் தொடர்ந்து 12,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சி வகுப்பின் போது கணினி மற்றும் செல்போன்களை எப்படி கையாள்வது, தொழில்நுட்ப வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி ஆசிரியர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல, ஹைடெக் ஆய்வகங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றியும் EMIS இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்து பற்றியும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 12,500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை முதல் 76 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்தமாக 2.10 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.