குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார்?

 

குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார்?

நடிகை குஷ்புவின் கணக்கை முடக்கியது யார் என கேட்டு ட்விட்டருக்கு சென்னை சைபர் க்ரைம் போலீஸ் கடிதம் எழுதியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பூ அண்மையில் பாஜகவில் இணைந்தார். அவ்வப்போது அரசுக்கு எதிரான விமர்சனங்களையும் காரசாரமான விவாதங்களையும் ட்விட்டர் மூலமாக மக்களுக்கு தெரிவித்து வந்தார். பெரும்பாலும் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹேக் செய்யப்பட்டது. சுமார் 1.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் கொண்ட அவரது ட்விட்டர் கணக்கில் இருந்த அனைத்துப் பதிவுகளும் டெலிட் செய்யப்பட்டதோடு பெயரும் மாற்றம் செய்யப்பட்டது.

குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார்?

இது குறித்து குஷ்பு கடந்த 20ஆம் தேதி தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். தனது ட்விட்டர் கணக்கை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக தான் புகார் அளித்திருப்பதாக அவர் விளக்கமளித்திருந்தார். குஷ்புவின் புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார் என்பதை தெரிவிக்குமாறு ட்விட்டர் நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். அவரது டுவிட்டர் கணக்கை மீண்டும் அவரிடமே வழங்க வேண்டுமென்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.