இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது : உயர்நீதிமன்றம் அதிரடி!

 

இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது : உயர்நீதிமன்றம் அதிரடி!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைப் போல இனியொரு சம்பவம் நடைபெறக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தலைமை நீதிபதி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் அளித்திருந்த மனுவில், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. தமிழக முதன்மை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் தேசிய உரிமை ஆணையம் வழக்கை முடித்து வைத்தது.

இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்கக் கூடாது : உயர்நீதிமன்றம் அதிரடி!

விசாரணை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அந்த வழக்கை மனித உரிமை ஆணையம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ஆயுதமின்றிப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கையையும் முதன்மை செயலாளர் அறிக்கையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இது குறித்து இருதரப்பும் பதிலளிக்க ஆணையிட்டனர். மேலும், வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.