திருச்சி- குடியிருக்கும் வீட்டை முன்னறிவிப்பின்றி இடிக்க முயன்ற மாநகராட்சி! மண்ணெண்ணெய் ஊற்றி வாலிபர் தற்கொலை முயற்சி!

திருச்சி- குடியிருக்கும் வீட்டை முன்னறிவிப்பின்றி இடிக்க முயன்ற மாநகராட்சி! மண்ணெண்ணெய் ஊற்றி வாலிபர் தற்கொலை முயற்சி!

28ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டை உரிய முன்னறிவிப்பின்றி இடிக்க முயலும் மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து மாநகராட்சி கோட்ட அலுவலகம் முன்பு வாலிபர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் உய்யங்கொண்டானில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி- குடியிருக்கும் வீட்டை முன்னறிவிப்பின்றி இடிக்க முயன்ற மாநகராட்சி! மண்ணெண்ணெய் ஊற்றி வாலிபர் தற்கொலை முயற்சி!

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உய்யங்கொண்டான் இரட்டைவாய்க்கால் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் 28ஆண்டுகளாக வீடுகட்டி அருள்தாஸ் என்பவர் தனது மனைவி, மகனுடன் குடியிருந்துவரும் சூழலில், கடந்த வாரம் அருள்தாசின் மனைவி உடல்நலக்குறைவால் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி- குடியிருக்கும் வீட்டை முன்னறிவிப்பின்றி இடிக்க முயன்ற மாநகராட்சி! மண்ணெண்ணெய் ஊற்றி வாலிபர் தற்கொலை முயற்சி!

இதனிடையே கூலித்தொழில் செய்துவரும் இவர்களது குடும்பத்தினருக்கு தற்போது கொரோனா ஊரடங்கில் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், துக்க நிகழ்வு நடந்துள்ள இக்காலகட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்பின்றி இடத்தை காலிசெய்யச்சொல்லி நேற்று மிரட்டல் விடுத்ததுடன், இன்று காலை நோட்டீஸ் விடுத்து 10மணிக்கு வீட்டை இடிக்கப்போவதாக மாநகராட்சியினர் மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் மனமுடைந்த அருள்தாசின் மகன் அர்ஜித் திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால், கோட்ட அலுவலகம் முன்பு தான் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கு எவ்வித போலீசாரும் குவிக்கப்படாத நிலையில், செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகத்துறையினர் அந்த வாலிபரை காப்பாற்றி அதன்பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். திடீரென்று வாலிபர் தீக்குளிக்க முயற்சித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.