10ம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் குழப்பம்! – விசாரணை நடத்தும் பள்ளிக் கல்வித் துறை

10ம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் குழப்பம்! – விசாரணை நடத்தும் பள்ளிக் கல்வித் துறை

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொடர்பான குழப்பம் நீடித்து வரும் நிலையில், இது பற்றி பள்ளிக் கல்வித் துறை ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.

10ம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் குழப்பம்! – விசாரணை நடத்தும் பள்ளிக் கல்வித் துறை
கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. காலாண்டு, அரையாண்டு, வருகைப் பதிவு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது. 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில், 4359 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பது அரசின் அறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது தெரியவந்தது.

10ம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் குழப்பம்! – விசாரணை நடத்தும் பள்ளிக் கல்வித் துறை
அனைவரும் பாஸ் என்று அறிவித்துவிட்டு 4300 பேர் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு, தேர்வுக்கு முன்பு மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் சென்ற மாணவர்கள், காலாண்டு, அரையாண்டில் ஒரு தேர்வு கூட எழுதாத மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவில்லை என்று அரசு தேர்வுத் துறை இயக்ககம் விளக்கம் அளித்தது.
மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பெயர் எப்படி தேர்வு எழுதுபவர்கள் பட்டியலில் வந்தது, அவர்களுக்கு எப்படி ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. மேலும், மதிப்பெண் குறைந்துவிட்டதாக பல மாணவர்கள் கண்ணீர் புகார்

10ம் வகுப்பு தேர்ச்சி பட்டியலில் குழப்பம்! – விசாரணை நடத்தும் பள்ளிக் கல்வித் துறை

அளித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து விலகிய மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டது எப்படி என்று மாவட்ட கல்வி அலுவலர்களிடம் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தாமஸ் வைத்தியன் விசாரணை நடத்தி வருகிறார்.