மகசூல் பெருக்கம்… மகிழும் விவசாயி – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

 

மகசூல் பெருக்கம்… மகிழும் விவசாயி – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சிக்கு புறப்பட்டார். அங்கிருந்து காரில் கல்லணை கால்வாய்க்கு சென்ற முதல்வர் ரூபாய் 122 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

மகசூல் பெருக்கம்… மகிழும் விவசாயி – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள முதலை முத்துவாரி தூர்வாரும் பணியையும் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணியையும் ஆய்வு செய்தார். அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இன்று இரவு தஞ்சையிலேயே தங்கவிருக்கும் முதல்வர் நாளை காலை மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளார்.

மகசூல் பெருக்கம்… மகிழும் விவசாயி – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

இந்த நிலையில், டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை தான் ஆய்வு செய்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். தமிழ்நாட்டின் நிகர பயிரிடு பரப்பை 75%-ஆக உயர்த்துதல் என்பது தேர்தலுக்கு முன்பாக நான் அளித்த 7 உறுதிமொழிகளில் ஒன்று. மகசூல் பெருக்கம்; மகிழும் விவசாயி என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது! என்று குறிப்பிட்டுள்ளார்.