மேலும் சில தளர்வுகள்… முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

 

மேலும் சில தளர்வுகள்… முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில வாரங்களுக்கு முன் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. கடந்த முறை, பாதிப்பு வாரியாக மாவட்டங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது.

மேலும் சில தளர்வுகள்… முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

மூன்றாம் பிரிவில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. ஒன்றாம் பிரிவு மாவட்டங்களில் அதிக கட்டுப்பாடுகளும் இராண்டாம் பிரிவு மாவட்டங்களில் குறைவான கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளது. மேற்கண்ட 4 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மேலும் சில தளர்வுகள்… முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!

இந்த நிலையில், தற்போது அமலில் உள்ள ஊரடங்கு 28ஆம் தேதி காலையோடு முடிவடைவதால் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள அக்கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த முறை கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்குவது, ஜவுளி மற்றும் நகைக் கடைகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.